இரு சாலை விபத்து; இருவர் பலி
கோவை; திருப்பூர் மாவட்டம், உடுமலை, போடிப்பட்டி, தம்பி நகரை சேர்ந்தவர், ஹர்ஷத், 20. நேற்று முன்தினம் மதியம், ஹர்ஷத் அவரது நண்பர் சபரி கிரிவாசன் உடன் பைக்கில், அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை சபரி கிரிவாசன் ஓட்டிச் சென்றார்.
பீளமேடு அருகே, முன்னாள் சென்ற ஆட்டோவை சபரி கிரிவாசன் முந்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் கீழே விழுந்தனர். இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனை செல்லும் வழியிலேயே, ஹர்ஷத் உயிரிழந்தார். கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மற்றொரு விபத்து
கோவை துடியலூர், ராக்கிபாளையம், ஏ.கே.எஸ்.நகரை சேர்ந்த ஆறுமுகம், 75 பைக்கில் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்றார். தொப்பம்பட்டி பிரிவு அருகே அவ்வழியாக வந்த லாரி, ஆறுமுகம் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் துாக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து, கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லாரி டிரைவர் பீகாரைச் சேர்ந்த லால் பாபு மண்டல், 26 என்பவர் மீது, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.