சித்திரை மாத கனிகள் அலங்காரத்தில் ஆஞ்சநேயர்

கோவை,; கோவை காரமடையை அடுத்த மருதுாரில், பழமையான அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர் குடிகொண்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இக்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் சனி அன்று, விழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சித்திரை மாத முதல் சனி விழாவை முன்னிட்டு, அதிகாலை மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்பு மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, கொய்யா, திராட்சை, சப்போட்டா, பிளம்ஸ் உள்ளிட்ட, 27 வகை கனிகளால் ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
காரமடை சுற்றுப்பகுதியில் உள்ள, பஜனை குழுவினரின் பஜனை நடந்தது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஆஞ்சநேய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
என்.ஆர்.காங்., வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் அமைச்சரிடம் மனு
-
நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த சிறுபாசனம், நீர்நிலை கணக்கெடுப்பு
-
மான் மலையில் காட்டுத் தீ
-
சென்டாக் பி.எஸ்சி., நர்சிங் நுழைவு தேர்வு எழுத 15ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம் விநியோகம்
-
பேரிடர் மேலாண்மை காலங்களில் சிறப்பான பணிக்கு விருது பெறலாம்
-
பரமக்குடி அருகே பார்த்திபனுாரில் ரூ.6.93 கோடியில் உயர்மட்ட பாலம்
Advertisement
Advertisement