காசிபாளையத்தில் நிழற்கூடம் அமைக்க பயணிகள் கோரிக்கை
அரவக்குறிச்சி :பொதுமக்கள் பல மணி நேரம் வெயிலில் காத்திருப்பதால், நிழற்கூடம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சின்னதாராபுரத்தில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் காசிபாளையம் உள்ளது. இப்பகுதி மக்கள் பல்வேறு பணிகள் நிமித்தமாக, தினந்தோறும் கரூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். கரூரில் இருந்து
சின்னதாராபுரம் செல்லும் சாலையில், காசிபாளையம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்து பஸ்சில் ஏறி செல்ல வேண்டும். ஆனால் இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லை. மழை மற்றும் கொளுத்தும் வெயில் காலங்களில் பொதுமக்கள் பல மணி நேரம் வெட்ட வெளியில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. காசிபாளையம் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement