'மருத்துவமனையிலிருந்து மீட்கப்பட்ட சிறுமி குறித்து தகவல் தெரிவிக்கலாம்'


கரூர் :பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் மீட்கப்பட்ட, 7 வயது சிறுமி குறித்து தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளலாம் என, கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

குளித்தலை பகுதியில் உள்ள ஹெட்ஸ் குழந்தைகள் இல்லத்தில், தங்க கனிமொழி என்ற, 7 வயது சிறுமி நவ.,27 முதல் தங்க வைக்கப்பட்டுள்ளார். இவரை, சம்பூரணம் என்பவர் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் விட்டு சென்றுள்ளார்.


குழந்தைகள் இலவச அழைப்பு எண் -1098க்கு வந்த தகவல்படி, சைல்டு லைன் பணியாளரால் சிறுமி மீட்கப்பட்டுள்ளார். சிறுமி பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை.
இவரது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் பற்றியும் இவரது முகவரி பற்றியும் தெரியவில்லை.
இது குறித்து தகவல் தெரிந்தால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலக வாட்ஸ் ஆப் எண்ணான, 89033 31098 தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement