சட்ட விரோத விற்பனை 170 மதுபாட்டில் பறிமுதல்
சேலம் :சேலம் டவுன் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், எஸ்.ஐ., மஞ்சுளா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அண்ணா சிலை அருகில், போலீசார் சோதனை நடத்திய போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், ஆட்டோவில் வந்தவர் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்த கண்ணன், 37, என்பதும் சந்துக்கடை வைத்து, விற்பனை செய்ய மது பாட்டில்களை கொண்டு சென்றதும் தெரியவந்தது. கண்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து, 170 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement