செவிலியர் தின விழா

சிவகங்கை : சிவகங்கை லயன்ஸ் சங்கம் சார்பில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
முதல்வர் சத்யபாமா தலைமை வகித்தார். மருத்துவக் கண்காணிப்பாளர் கண்ணன், நிலைய மருத்துவர் மகேந்திரன், துணை நிலைய மருத்துவர்கள் முகமது ரபிக், தென்றல், சரவணன், முத்துகண்ணன் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை செவிலியர்கள் அனைவரது சேவையையும் பாராட்டி கவுரிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவமனை அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ் கண்ணா, தனபால்,சந்திரசேகரன், முத்துபாண்டியன் செய்திருந்தனர்.
திருப்புவனம்: திருப்புவனம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர்ஸ்ரீவித்யா தலைமை வகித்தார். செவிலியர்களை பாராட்டி டாக்டர் ஸ்ரீவித்யா, கார்த்திகேயன்சான்று வழங்கினர். தலைமை செவிலியர் புஷ்பலதா, செவிலியர் இருளாயி பங்கேற்றனர். செவிலியர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுத்தனர்.
மேலும்
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
-
தங்கம் விலை நேற்று ரூ.2,360 சரிவு; இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு!