நடிகருடன் செல்பி போலீசார் ஆர்வம்
விழுப்புரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நடிகருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் மிஸ் திருநங்கை நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பங்கேற்றார்.
இவர், காரில் இருந்து இறங்கி மேடைக்கு வருவதற்கு முன், அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் பலரும், நடிகர் விஷாலோடு நின்று செல்பி எடுத்து கொண்டனர்.
இதனால், நடிகரை காண கூட்ட மேடையை சூழ்ந்து நின்று கொண்டதால், நடிகர் விஷாலால் மேடைக்கு வர முடியவில்லை.
இதையடுத்து, கூட்டமைப்பு நிர்வாகிகள், மைக் மூலம், 'போலீசார் பாதுகாப்பு பணியில் தயவு செய்து ஈடுபடுங்கள்' என கேட்டுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி, நடிகர் விஷாலை மேடைக்கு ஏற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
-
தங்கம் விலை நேற்று ரூ.2,360 சரிவு; இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு!
-
"நீங்கள் எங்க ஹீரோ அங்கிள்" - பிரதமருக்கு நன்றி சொன்ன இமாம் பேரன்
-
பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு
Advertisement
Advertisement