பாட்மின்டன்: தருண் அபாரம்

படும்வன்: தாய்லாந்து ஓபன் தகுதிச்சுற்றில் ஸ்ரீகாந்தை வீழ்த்தினார் தருண்.
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடர் படும்வனில் நடக்கிறது. நேற்று இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. ஆண்கள் ஒற்றையர் முதல் தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சக வீரர் சங்கர் முத்துசாமியை 21-15, 21-17 என வீழ்த்தினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் மன்னேபள்ளி, சீன தைபே வீரர் குவான் லினை 17-21, 21-19, 21-17 என போராடி வென்றார்.
அடுத்து நடந்த இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் ஸ்ரீகாந்த், தருண் மோதினர். இதில் தருண், 21-16, 21-19 என ஸ்ரீகாந்தை வீழ்த்தி, பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.
இரண்டாவது தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, மலேசிய வீரர் ஹோ ஜஸ்டினிடம் 14-21, 20-22 என தோல்வியடைந்தார்.
இந்திய வீரர் சதிஷ் குமார், முதல் தகுதிச்சுற்றில் 17-21, 21-12, 12-21 என மலேசிய வீரர் அய்டிலிடம் தோல்வியடைந்தார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்று இரண்டாவது போட்டியில் இந்தியாவின் இரா சர்மா, தமன்வானிடம் 12-21, 18-21 என தோல்வியடைந்தார்.