கிக் பாக்சிங் போட்டியில் சிவகங்கை மாணவர்கள்

சிவகங்கை : தமிழ்நாடு கிக் பாக்சிங் சங்கம் சார்பில் தமிழ்நாடு கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 2025 மாநில கிக் பாக்சிங் போட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு உடற்கல்வி பல்கலையில் நடந்தது.

இதில் 25 மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

கேடட்ஸ், ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 19 வீரர்கள் மாவட்ட கிக் பாக்சிங் சங்கம் சார்பில் பங்கேற்றனர். இதில் 6 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களை வென்றனர். பதக்கம் வென்ற வீரர்கள் வேலுாரில் ஜூனில் 1 முதல் 4 வரை நடக்கக் கூடிய மாநில கிக் பாக்சிங் பயிற்சி முகாமில் பங்கேற்று பின்னர் தேசியப் போட்டிக்கு செல்ல உள்ளனர். இவர்களை சிவகங்கை மாவட்ட கிக் பாக்சிங் சங்க பொதுச் செயலாளர் குணசீலன், பயிற்சியாளர் சித்ரா, சங்கத் தலைவர் சதீஷ் பாராட்டினர்.

Advertisement