வாக்குறுதி திட்டத்துக்கு பாராட்டு அரசு அதிகாரிகளே பொறுப்பு

மைசூரு : ''வாக்குறுதி திட்டத்துக்கான பாராட்டு அரசு அதிகாரிகளுக்கு தான் செல்ல வேண்டும்,'' என கிருஷ்ணராஜா பா.ஜ., - எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சா தெரிவித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 வயது பூர்த்தி அடைந்தது தொடர்பாக, மைசூரு கிருஷ்ணராஜா பா.ஜ., - எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

பா.ஜ.,வில் தலைவர்களுக்கு பற்றாக்குறை இல்லை. நரேந்திர மோடியை தவிர, கட்சி மாற்று தலைவர்கள் பலர் உள்ளனர். உமாபாரதி, குஜராத்தில் கேசுபாய் பட்டேல் ஆகியோர் கட்சியில் இருந்து சென்றனர்; எதுவும் நடக்கவில்லை.

கட்சியை விட தனிப்பட்ட நபர் முக்கியம் அல்ல. கட்சியில் இருந்து ஒருவர் விலகினால், மற்றொருவர் இணைவார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்று யார் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். கட்சியின் முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்பட்டு உள்ளோம்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் வெற்றி பெற்றதற்கான பாராட்டு ராணுவத்திற்கு செல்ல வேண்டும் என்பது சரியே. இதை அரசியல் ஆக்க கூடாது. ஆனால், காங்கிரசார் அரசியல் ஆக்குகின்றனர்.

அதுபோன்று கர்நாடகாவில் வாக்குறுதி திட்டத்துக்கான பாராட்டு யாருக்கு செல்ல வேண்டும்; இதில் அரசின் செயல்பாடு என்ன. இந்த பாராட்டு, அரசு அதிகாரிகளுக்கு தான் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement