வழிப்பறி திருடன் சிக்கினான்
ஆதம்பாக்கம், ஆதம்பாக்கம், நியூ காலனி 5வது தெருவைச் சேர்ந்தவர் குமரேசன், 32. இவர், ஆதம்பாக்கத்தில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். பாலாஜி நகர் பிரதான சாலையில் வியாபாரம் செய்தபோது, நான்கு பேர் கும்பல் குமரேசனை மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
அவர் மறுக்கவே, தள்ளுவண்டியில் இருந்த பழங்களை சாலையில் வீசி, தகராறு செய்தனர். மேலும் கத்தியை காட்டி மிரட்டி, 3,500 ரூபாய் பறித்து சென்றனர்.
ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து, அனகாபுத்துாரைச் சேர்ந்த இம்ரான் பரித், 28, என்பவரை கைது செய்தனர். இவர், மீது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை, வழிப்பறி உட்பட 9 வழக்குகள் உள்ளன. இவ்வழக்கில் தொடர்புடைய மூவரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement