மது போதையில் நண்பனுக்கு கத்திக்குத்து
புளியந்தோப்பு, புளியந்தோப்பைச் சேர்ந்த ஆபாவாணன், 26, என்பவர், நண்பர் ஜோதி ரஞ்சன், 23, உள்ளிட்டோருடன் நேற்று மாலை புளியந்தோப்பு ஆடுதொட்டி உள்புறம் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
அப்போது நண்பர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த ஜோதி ரஞ்சன் கையில் வைத்திருந்த கத்தியால், ஆபாவாணன் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆபாவாணன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக, மருத்துவமனை தகவலின் அடிப்படையில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜோதிரஞ்சன், 23, ராகுல், 23, ஆகியோரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement