தரமணியில் நாளை மின் குறைதீர் கூட்டம்

சென்னை,சென்னை தரமணி சி.எஸ்.ஐ.ஆர்., சாலையில், 110 கிலோ வோல்ட் திறனில், டைடல் பார்க் துணைமின் நிலையம் உள்ளது.

அந்த வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள ஐ.டி.,காரிடார் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை, 15ம் தேதி காலை, 10:30 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

இதில் தரமணி, பெருங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.

*

Advertisement