நடைபாதையை ஆக்கிரமித்து வைத்த பேனர் அகற்றம்

முகப்பேர், முகப்பேர் அடுத்த திருமங்கலம் அருகே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. அதன் அருகிலுள்ள நடைபாதையை ஆக்கிரமித்து, தி.மு.க.,வினர் கடந்த 10ம் தேதி பேனர் வைத்தனர்.

நிகழ்ச்சி முடிந்தும், நேற்று முன்தினம் வரை பேனர் அகற்றப்படாமல் இருந்தது. இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், சாலையில் நடந்து செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

இது குறித்து புகைப்படத்துடன் கூடிய செய்தி, 'தினமலர்' நாளிதழில் நேற்று வெளியானது. இதன் எதிரொலியாக, நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பேனர், நேற்று அகற்றப்பட்டது.

இதையடுத்து, பாதசாரிகள் மீண்டும், நடைபாதையை பயன்படுத்த கூடிய சூழல் உருவானது. நடைபாதையை ஆக்கிரமித்து, பேனர்கள் வைக்கப்படுவதை தடுக்க சென்னை மாநகராட்சி மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement