மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம் 

புதுச்சேரி : மண்ணாடிப்பட்டு கொம் யூன் கமிட்டி, மா.கம்யூ., சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தட்டாஞ்சாவடி, கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராஜாங்கம் கண்டன உரையாற்றினார். கொம்யூன் செயலாளர் அன்புமணி, மாநிலக்குழு சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், திருபுவனை விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்கத்தில் வைக்கப்பட்டு, முதிர்வடைந்த நிரந்தர வைப்புத் தொகையை, உடனடியாக திரும்ப வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மீதான ஊழல் புகார் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement