எம்.பி., - எம்.எல்.ஏ., கண்டன ஆர்ப்பாட்டம்

அந்தியூர்,பர்கூர்மலையில் உள்ள தாமரைக்கரையில், மலைவாழ் மக்களுக்கு பழங்குடியின அங்கீகாரம் வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, இ.கம்யூ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டக்குழு உறுப்பினர் கணேசன் வரவேற்றார். தமிழ்நாடு பழங்குடியின மாநில தலைவர் குணசேகரன், அந்தியூர் இ.கம்யூ., தாலுகா செயலாளர் தேவராஜ் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்க மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். திருப்பூர் எம்.பி., சுப்பராயன், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் பேசினர். மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி மக்களை, பழங்குடியினராக அங்கீகரித்து, எஸ்.டி., சான்றிதழ் வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Advertisement