தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்



ஈரோடு,பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவ, மாணவியருக்கு, நேற்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.


பள்ளி வேலை நாட்களில், வேலை நேரத்தில் வந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வாங்கி செல்லலாம். முதல் நாளான நேற்று மாணவிகள் ஆர்வத்துடன் பெற்று சென்றனர். மாநகரில் உள்ள ஒரு சில பள்ளிகளில் இன்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

Advertisement