மக்களிடம் சிக்கிய பழங்குற்றவாளி

ஈரோடு :கொடுமுடி அருகே கல்வெட்டுபாளையத்தில் நேற்று அதிகாலை, 1:00 மணியளவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்ற ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

சிவகிரி தம்பதி கொலை எதிரொலியால் விழிப்புணர்வு அடைந்திருந்த மக்கள், கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரை அழைத்து சென்று விசாரித்தனர். கொளாநல்லி, காரணம்பாளையத்தை சேர்ந்த அன்சர் அலி, 36, என தெரியவந்தது. ஏற்கனவே அப்பகுதியில் பர்னீச்சர் கடையில் வேலை செய்தார்.


இவர் மீது கொடுமுடி போலீசார், 2022ல் திருட்டு வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்தவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்தார். இந்நிலையில் மக்களிடம் பிடிபட்டுள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement