மூலிகை முருகன் கோயில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு சுக்காம்பட்டி வாஸ்தீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள மூலிகை முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு மூலிகை திருநீறு பூசிக்கொள்பவர்களுக்கு தீராத நோய்கள் தீரும் என சித்தர் சுக்காம்பட்டி சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிவனடியார் திருக்கூட்ட அடியார்கள் செய்திருந்தனர்.

Advertisement