பயன்பாட்டிற்கு வராத சுத்திகரிப்பு நிலையம்

அலங்காநல்லுார், மே 14--

மதுரை மேற்கு ஒன்றியம் அதலை ஊராட்சியில் 5 ஆண்டுகளுக்கு முன் மந்தை பகுதியில் ரூ.9 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது.

இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. குடிநீர் சுத்திகரிப்பு செட் அருகே அமைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றிய அலட்சியத்தால் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் 5 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர்.

இன்று வரை இந்நிலையம் ஒரு குடம் தண்ணீர் கூட வழங்காத நிலையில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement