மதுரை---அபுதாபி விமான சேவை

அவனியாபுரம்: மதுரையில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமானம் நிறுவனம் வாரம் மூன்று நாட்கள் நேரடி விமான சேவையை ஜூன் 13ல் துவக்க உள்ளது.

மதுரையிலிருந்து வாரம் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மதியம் 2:35 மணிக்கு புறப்படும் விமானம் அபுதாபிக்கு அந்நாட்டு நேரப்படி மாலை 5:20 மணிக்கு சென்றடையும். அபுதாபியிலிருந்து அந்நாட்டு நேரப்படி காலை 7:20 க்கு புறப்படும் விமானம் மதுரை விமான நிலையத்திற்கு மதியம் 1:50 மணிக்கு வந்து சேரும். பயணிகள் படுத்திக் கொள்ளுமாறு இண்டிகோ நிறுவனம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Advertisement