நடுரோட்டில் குடிநீர் வால்வு

மதுரை : மதுரையில் செல்லுார் - குலமங்கலம் ரோட்டில் நடுவழியில் குடிநீர் வால்வு அமைக்கப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வாய்ப்புள்ளது.

குலமங்கலம் ரோட்டில் எல்.ஐ.சி., காலனி முதல் தெரு அருகே நடுரோட்டில் குடிநீருக்கான வால்வு அரைகுறையாக அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள இப்பகுதியில் இரவில் தெருவிளக்கு வெளிச்சமும் இல்லாததால் டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலையுள்ளது.

அப்பகுதியினர் கூறுகையில், ''குடிநீர் வால்வு அமைக்கும் பணிகள் ஒன்றரை மாதமாக நடந்தது. தற்போது பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் விட்டுச் சென்றனர். பணி முடியவில்லை என்பதைக் குறிக்கும் வகையில் சிவப்பு கொடியோ, தடுப்பு வேலியோ, எச்சரிக்கை பலகையோ வைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்வோரும் விபத்தில் சிக்கி உயிர்பலி ஏற்படும் நிலையுள்ளது. பணிகளை விரைந்து முடித்து சிலாப் அமைக்க வேண்டும்'' என்றனர்.

Advertisement