அதிக மார்க் எடுக்கும் மாணவர்களுக்கு தங்க செயின்; முத்தியால்பேட்டை காங்., பொறுப்பாளர் அறிவிப்பு
புதுச்சேரி : முத்தியால்பேட்டை தொகுதி காங்., கட்சியின் பொறுப்பாளரும், ஈரம் பவுண்டேஷன் நிறுவனருமான ராஜேந்திரன் வௌியிட்டுள்ள அறிக்கை:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முத்தியால்பேட்டை தொகுதியில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு முதல் பரிசாக தலா 8 கிராம் தங்க செயின், 2ம் இடம் பிடிக்கும் மாணவருக்கு 6 கிராம் தங்க செயின், மூன்றாம் இடம் பிடிக்கும் மாணவருக்கு 4 கிராம் தங்க செயின் பரிசாக வழங்கி ஊக்கப்படுத்த உள்ளேன்.
மேலும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் 90, 80, 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு முறையே லேப்டாப்-கோல்டு காயின், ஸ்மார்ட் 'டிவி'யுடன் கோல்டு காயின், ஸ்மார்ட் போனுடன் கோல்டு காயின், ஸ்மார்ட் வாட்சுடன் கோல்டு காயின் வழங்கப்பட உள்ளது. இதுதவிர, 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் கோல்டு காயின் வழங்கப்பட உள்ளது.எனவே, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் 60 சதவீத தேர்ச்சிக்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களும் தங்கள் மதிப்பெண் நகல், பெற்றோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு நகலுடன், முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் வீதி எண்-27-ல் உள்ள கட்சி அலுவலகத்தை நேரில் அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 78457-36818, 78457-36819 ஆகிய எண்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும்
-
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
-
பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!