ஹிந்து மக்கள் கட்சியினர் மனு

தேனி : கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவனிடம் ஹிந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் அளித்த மனுவில், 'தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத மாணவர்களுக்கு கல்வி அளிக்கப்படுகிறது. கடந்தாண்டு கட்டணத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது. இச் சட்டத்தில் பயிலும் மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்த பள்ளி நிறுவனங்கள் கூறுகின்றன.

இதனால் ஏழை மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

தமிழக அரசு பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்க கோரினார்.

Advertisement