இது முடிவின் ஆரம்பம்... 2026க்குள் மாவோயிஸ்டுகளுக்கு முடிவு கட்டுவோம்; அமித்ஷா

புதுடில்லி: மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள கரேகுட்டா மலையில் மூவர்ணக் கொடி பறப்பது மகிழ்ச்சியளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
@1brகரேகுட்டா மலைத்தொடரானது தெலுங்கானா - சத்தீஸ்கர் எல்லையில் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் இருக்கிறது. ஏப்.21ம் தேதி முதல் அங்கு மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கை (ஆபரேஷன் சங்கல்ப்) தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் 31 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது; இந்த மலையில் ஒரு சமயத்தில் சிவப்பு பயங்கரவாதம் கோலோச்சி இருந்தது. தற்போது, மூவர்ணம் பறப்பது பெருமையளிக்கிறது. வரும் 2026 மார்ச்ச மாதத்திற்குள் மாவோயிசத்தை அழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது.
மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையை நமது படைகளால் வெறும் 21 நாட்களுக்குள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆபரேஷனில் எந்த வீரருக்கும் பாதிப்பில்லாதது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள் திட்டமிட்டதை விட மிக அதிகமாகவே செய்து முடித்துள்ளோம். இதனால், நாங்கள் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம். இது முடிவின் ஆரம்பம், 2026 மார்ச் 31க்குள் மாவோயிசத்தை ஒழிக்கும் இலக்கை அடைவோம், எனக் கூறினார்.
வாசகர் கருத்து (1)
Priyan Vadanad - Madurai,இந்தியா
14 மே,2025 - 23:03 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பட்டா கேட்டு முற்றுகை யிட்ட மக்கள்
-
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கண்டிப்பு - ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
-
வீரபாண்டி சித்திரை திருவிழா ஊர் பொங்கலுடன் நிறைவு
-
டாக்டர் கார் மீது கல்வீச்சு
-
கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு
-
கட்டுமானப் பொறியாளர்கள் மனு
Advertisement
Advertisement