மாளவிகா, உன்னதி வெற்றி: தாய்லாந்து ஓபன் பாட்மின்டனில்

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா, உன்னதி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
பாங்காக்கில், தாய்லாந்து ஓபன் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், அயர்லாந்தின் நுயென் மோதினர். இதில் ஏமாற்றிய லக்சயா 18-21, 21-9, 17-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத் 13-21, 21-17, 16-21 என இந்தோனேஷியாவின் ஆல்வி பர்ஹானிடம் தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், துருக்கியின் நெஸ்லிஹான் அரின் மோதினர். அபாரமாக ஆடிய மாளவிகா 21-12, 13-21, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 21-16, 20-22, 22-20 என ஜப்பானின் சுகியமாவை தோற்கடித்தார். இந்தியாவின் உன்னதி ஹூடா 21-14, 18-21, 23-21 என தாய்லாந்தின் தமோன்வானை வென்றார்.
இந்தியாவின் ரக் ஷிதா ஸ்ரீ 18-21, 7-21 என சிங்கப்பூரின் யோ ஜியா மின்னிடம் வீழ்ந்தார்.பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திரிசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-15, 21-13 என மலேசியாவின் கார்மென் டிங், ஆங் ஜின் யீ ஜோடியை வென்றது.
மேலும்
-
முதுகுளத்துார், கமுதியில் காற்றுடன் பலத்த மழை
-
சிறப்பாக பணிபுரிந்த எஸ்.ஐ., போலீசாருக்கு டி.ஐ.ஜி பாராட்டு
-
மண்வெட்டியால் சாதம் கிளறி பக்தர்களுக்கு அன்னதானம்
-
ராமேஸ்வரம் இ சேவை மையத்தில் தடாலடி வசூலால் மக்கள் பாதிப்பு
-
மங்களநாதர் சுவாமி களரி மண்டகப்படி
-
பரமக்குடி வைகை ஆற்றில் தசாவதார சேவையில் அழகர்: கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்