ஏ.ஜே., மேல்நிலைப் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வுகளில் அபாரம்
புதுச்சேரி : தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையம் ஏ.ஜே., சி.பி.எஸ்.இ., மேல்நிலைப்பள்ளி சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து, பள்ளியின் சீனியர் முதல்வர் ரங்கநாதன் கூறியதாவது:
ஏ.ஜே., சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளி இந்தாண்டும் சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்துள்ளது. 10வது மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர் மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் மாணவர் ஹரிபாலன் 98.4 சதவீத மதிப்பெண், மாணவி காயத்ரி 94.3 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வில் மாணவிகள் காயத்ரி, நிரஞ்சனா, தீபா, அஞ்சலி ஆகியோர் அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த சாதனை பள்ளியின் தாளாளர்கள் டாக்டர் மேரி ஜான்சன், மேரி தீனா ஜான்சன் வழிகாட்டுதலுடன் ஆசிரியர்களின் கடின உழைப்பால் கிடைத்த வெற்றியாகும். பள்ளியில் பிளஸ் 1 வகுப்புக்கான சேர்க்கை நடந்து வருகிறது.
எங்கள் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இந்தி, தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு என 4 மொழிகள் கற்பிக்கப்படுகிறது.
சிறந்த ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். மேலும், நான்காம் வகுப்பு முதல் ரோபாட் தொழில்நுட்பத்தையும் கற்று கொடுத்து வருகிறோம்.
எங்கள் பள்ளியில் ஒவ்வொரு மாணவர் மீதும் தனிக்கவனம் செலுத்தி கற்பிக்கப்படுகிறது.
பாடத்தில் மட்டுமல்லாமல், மற்ற துறைகளிலும் சிறந்து விளங்க மாணவர்களுக்கு ஊக்கமும், பயிற்சியும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர், கூறினார்.