புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 4ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி : புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு நேற்று நான்காம் முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டலால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி கவர்னர் மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அவ்வப்போது இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கவர்னர் டில்லி சென்றுள்ள நிலையில், நேற்று காலை 11:45 மணி அளவில், கவர்னர் மாளிகைக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
தகவலின்பேரில் எஸ்.பி.,ரகுநாயகம் தலைமையில் பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன், மோப்ப நாய் டோனி மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று பகல் 12:15 மணி முதல் 1:00 மணிவரை நடத்திய சோதனையில், புரளி என்பது உறுதியானது.
இதே கவர்னர் மாளிகைக்கு, கடந்த மாதம் 14, 23 மற்றும் கடந்த 9ம் தேதிகளில் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் நேற்று நான்காம் முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது, போலீசாரை குழப்பமடையச் செய்துள்ளது.
மேலும்
-
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
-
பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!