மாவட்ட அளவிலான கிரிக்கெட்; முன்பதிவுக்கு இன்று கடைசி

கோவை; மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி வரும், 16ல் துவங்கும் நிலையில், முன்பதிவுக்கு இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

க.க.சாவடியில் உள்ள நாராயண குரு கல்லுாரியில், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான, மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி வரும், 16 முதல், 20ம் தேதி வரை நடக்கிறது. டென்னிஸ் பால் கொண்டு நடத்தப்படும் இப்போட்டியில் பங்கேற்க, வீரர்கள் தங்களது அணியை இன்றைக்குள் பதிவு செய்ய வேண்டும்.

முதல் பரிசு பெறும் அணிக்கு, ரொக்கப்பரிசாக ரூ.10 ஆயிரம்,கோப்பை, சான்றிதழ் மற்றும் இரண்டாம் பரிசாக ரூ.7,500, கோப்பை, சான்றிதழ் வழங்கப்படுகிறது.

சிறப்பு பரிசுகளும் காத்திருக்கின்றன. முன்பதிவுக்கு, உடற்கல்வி இயக்குனர் ஜெயபிரகாஷ் என்பவரை, 70109 47227 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement