புற்றுநோய் கண்டறியும் திட்டம்; திருப்பூர் மாவட்டத்திலும் துவக்கம்

திருப்பூர்; தமிழகத்தில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தபடி அமைச்சர் சுப்பிரமணியம், 12 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் - நத்தக்காடையூர், பழைய கோட்டை துணை சுகாதார நிலையத்தில் புற்றுநோய் கண்டறியும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் மீரா, சுகாதார நலப்பணிகள் துறை துணை இயக்குனர் ஜெயந்தி காங்கயம் வட்டார மருத்துவ அலுவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குனர் ஜெயந்தி கூறுகையில், ''18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு அடிப்படை புற்றுநோய் கண்டறியும் திட்டமும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் திட்டம் மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மாவட்டத்தில், 121 துணை சுகாதார நிலையங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டம் வரும் நாட்களில் விரிவாகசெயல்படுத்தப்பட இருக் கிறது,'' என்றார்.

Advertisement