தினம் ஒரு திருக்குறள் தொழிலாளர் துறை உத்தரவு
திருப்பூர்; தமிழக முதல்வர் அறிவித்தபடி, அரசு அலுவலகங்களில், திருக்குறள் மற்றும் பொருள் விளக்கம் எழுதி வைக்கப்படுகிறது. அதேபோல், தனியார் கடைகள் மற்றும் நிறுவனங்களில், திருக்குறள் உரை எழுதுவதை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், பொருள் விளக்கத்துடன், குறள் எழுதி காட்சிப்படுத்த வேண்டும். அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலை நிர்வாகங்களில், திருக்குறள் எழுதும் நிறுவனங்களுக்கு பரிசு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து, உதவி கமிஷனர் (அமலாக்கம்) காயத்திரி வெளியிட்டுள்ள அறிக்கை:
தொழில் நல்லுறவு பரிசுக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் போது, சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படுமென, தொழிலாளர் துறை கமிஷனர் அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வேலை அளிப்போர் அமைப்புகள், 'அய்யன் திருவள்ளுவரின் திருக்குறளை தினம் ஒரு குறள்' என்ற அடிப்படையில் பொருள் விளக்கத்துடன் எழுதி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
-
பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!