சாலை சீரமைப்பு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி : முதலியார்பேட்டை மக்கள் நகர், சுதானா நகர் விரிவு பகுதிகளில் சாலை மறுசீரமைப்பு பணிகளை சம்பத் எம்.எல்.ஏ., பூஜை செய்து துவக்கி வைத்தார்.

பொதுப்பணித்தறை, பொது சுகாதாரக் கோட்டம் சார்பில், முதலியார்பேட்டை மக்கள் நகர், சுதானா நகர் விரிவு பகுதிகளில் ரூ. 40.82 லட்சம் மதிப்பீட்டில் சாலையை மறுசீரமைப்பு பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

முதலியார்பேட்டை எம்.எல்.ஏ., சம்பத் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், பொது சுகாதாரக் கோட்ட செயற் பொறியாளர் கெஜலட்சுமி, உதவிப்பொறியாளர் சுந்தரி, இளநிலைப் பொறியாளர்கள் தணிகைவேல், தேவிபாரதி உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement