விழுப்புரம் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் உரிய காலத்தில் முடிக்க கலெக்டர் அறிவுரை
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் நிலை குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
விழுப்புரம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், திண்டிவனத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய பணி, மரக்காணம் கீழ்புத்துப்பட்டில் இலங்கை தமிழர்களுக்கான வீடுகளின் கட்டுமான பணி, திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்கா, பொதுப்பணித்துறை சார்பில் விக்கிரவாண்டி தாலுகா கீழக்கொந்தையில் நடக்கும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டுமானப்பணி, வெள்ளிமேடுபேட்டை செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி, திண்டிவனம் - மரக்காணம் சாலை அகலப்படுத்தும் பணி, செஞ்சி, வளவனூர், அரகண்டநல்லூர் பேரூராட்சிகளில் குடிநீர் பணி மேம்படுத்துதல் குறித்தும், முதலியார்குப்பம், செட்டிநகர், புதுக்குப்பம், அனிச்சங்குப்பம் மீனவ கிராமங்களில் மீன் இறங்குதளம் அமைக்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
திண்டிவனம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தும் பணி, விழுப்புரம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டப்பணிகள், செஞ்சி அரசு கலை அறிவியல் கல்லூரி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி 100 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் தாமதம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டு, பணிகளை விரைவாகமுடிக்க அறிவுறுத்தப்பட்டது. டி.ஆர்.ஓ., (நெடுஞ்சாலை) ராஜ்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மேலும்
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!
-
பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'
-
ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை; கல்வித்துறை அறிவிப்பு
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் கவாய்!