பட்டா வழங்க வலியுறுத்தி

வெள்ளகோவில்; திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், சிவநாதபுரம், தீத்தாம்பாளையம், சேரன் நகர் உள்ளிட்ட பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் இலவச வீட்டு மனைபட்டா கோரி மனு அளித்தனர். மனு அளிக்கப்பட்டு, நுாறு நாட்களை கடந்தும் நடவடிக்கை இல்லாததால் நேற்று மா.கம்யூ., கட்சி சார்பில் வெள்ளகோவில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சென்ற வருவாய் ஆய்வாளர் சுந்தரி, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினார். 'இதுதொடர்பாக உயரதிகாரிகளிடம் பேசியுள்ளதாகவும், விரைவில் உரிய தீர்வு காணப்படும்,' என்று அவர் உறுதியளித்தார். இதனால், அனைவரும் சமாதானம் அடைந்து, கலைந்து சென்றனர்.

Advertisement