ரோட்டின் மையத்தில் பள்ளம் சீரமைக்க எதிர்பார்ப்பு

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமீப காலமாக ரோடுகளில் திடீர் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

சமீபத்தில் குமார் நகரில் இருந்து வளையங்காடு செல்லும் ரோட்டில் மாநகராட்சி பள்ளி அருகே ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டு, பின் சரி செய்யப்பட்டது. இச்சூழலில், வளையன்காடு அருகே உள்ள சாமுண்டிபுரம் ராஜீவ் நகர் 2 வது வீதி மேற்கு நால் ரோட்டில், திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய சூழல் உள்ளது. எனவே, உடனடியாக பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement