குடியிருப்பு அருகே குப்பை மலை

பொங்கலுார்; கொடுவாயைச் சுற்றிலும் பனியன் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனம் உள்ளிட்டவை துவங்கப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை அதிகரிப்பால் குப்பை பிரச்னை தீராத தலைவலியாக உருவெடுத்துள்ளது.

குப்பை மேலாண்மை செய்வதில் ஊராட்சி நிர்வாகம் சரிவர செயல்படவில்லை. இதனால், எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. குடியிருப்புகளுக்கு அருகே பிளாஸ்டிக் கழிவு கொட்டப்படுவதால் அதிலிருந்து வரும் துர்நாற்றம் பொது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.

அருகில் உள்ள விவசாய நிலங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் காற்றில் அடித்துச் செல்லப்படுவதால் விவசாயிகள் கால்நடைகளை மேய்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே, திடக்கழிவு மேலாண்மைக்கு அதிக நிதி ஒதுக்கி, கழிவுகள் அற்ற ஊராட்சியாக கொடுவாயை மாற்ற வேண்டும். மக்கள் ஆரோக்கியமாக வாழ ஊரை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement