ஆக்கிரமிப்பு அகற்றம்
சிதம்பரம் : சிதம்பரத்தில் தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
சிதம்பரம் தேரோடும் வீதிகளான கீழ வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, மேல வீதிகளில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறை சார்பில், வியாபாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இருப்பினும் சிலர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதையடுத்து நேற்று முதற்கட்டமாக தெற்கு வீதியில் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் விஜயராஜ், நகராட்சி அமைப்பு ஆய்வாளர் ரகுநாதன் தலைமையில் ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகளை போலீசார் சமாதானம் செய்தனர். சிலர் தாங்களாவே முன்வந்து ஆக்கிரமிப்பு அகற்றினர். பல ஆண்டுகளுக்கு பிறகு ஆக்கிரமிப்பு அகற்றுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வாசகர் கருத்து (1)
Narayanan K - ,
14 மே,2025 - 07:26 Report Abuse

0
0
Reply
மேலும்
-
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
-
பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
Advertisement
Advertisement