டிப்பர் லாரிகள் 2வது நாளாக 'ஸ்டிரைக்'

கடலுார் : கடலுாரில் ஜல்லி, கிராவல், எம்.சாண்ட் விலை உயர்வை கண்டித்து, டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லி, கிராவல், எம்.சாண்ட் விலை உயர்வைக் கண்டித்து கடலுார் மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இரண்டாம் நாளாக கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில், லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் கருணாநிதி தலைமையில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர். தகவலறிந்த தாசில்தார் மகேஷ், டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினர்.

Advertisement