இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க விண்ணப்பிக்கலாம்

விருதுநகர்; கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கிராமப்புறம், நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, ஆன்லைனில் மக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https//eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

இருப்பினும் பல சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களுள், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன. எனவே பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க மக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது சிட்டிசன் போர்ட்டல் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.

எதிர்வரும் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும், என்றார்.

Advertisement