சிவகாசியில் தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் அவதி
சிவகாசி; சிவகாசி என் ஆர்.கே.ஆர்., ரோடு பஜார் பகுதியில் நடமாடும் நாய்களால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
சிவகாசி என்.ஆர்.கே.ஆர்., ரோடு பஜார் பகுதி வழியாக பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல வேண்டும். தவிர இப்பகுதியில் அதிகமான கடைகள் இருப்பதால் எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். என்.ஆர்.கே.ஆர்., ரோடு பஜார் பகுதியில் அதிக அளவில் தெரு நாய்கள் நடமாடுகின்றன. இவைகள் ரோட்டில் நடந்து, சைக்கிள், டூ வீலரில் செல்பவர்களை விரட்டிக் கடிக்கின்றது. தவிர டூவீலரில் செல்பவர்களை விரட்டுகையில் அவர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
இதேபோல் சிவகாசி ரத வீதிகள், பழைய விருதுநகர் ரோடு, பி.எஸ்.ஆர்., ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் நடமாடுகின்றன. சிவகாசி விஸ்வநத்தம் ரோட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இந்த கருத்தடை அறுவை சிகிச்சை மையம் செயல்படாததால் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மாநகராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் அடையாளம் காணப்பட்டு தனியார் அமைப்பு மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய நிதி ஒதுக்கப்பட்டு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது இதனால் ரோட்டில் சுற்றி திரியும் நாய்களால் விபத்து ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தெரு நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து நாய்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!
-
பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'
-
ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை; கல்வித்துறை அறிவிப்பு
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் கவாய்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.70,440!