எம்.ஜி., எம்9 இ.வி., முன்பதிவு துவக்கம்

'எம்.ஜி.,' நிறுவனத்தின், 'எம்9' என்ற மின்சார சொகுசு எம்.பி.வி., காரின் முன்பதிவு துவங்கியது. இந்த கார், சென்னை, புதுடில்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள இந்நிறுவனத்தின் பிரீமியம் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 'எம்.ஜி., செலக்ட்' என்ற வலைதளம் வாயிலாகவும் இந்த காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். 51,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்யலாம் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு துவக்கத்தில் நடந்த, 'பாரத் மொபிலிட்டி' வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார், ஜூன் மாதத்திற்குள் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 'டொயோட்டா இன்னோவா', 'கியா கார்னிவெல்' எம்.பி.வி., கார்களை விட, பெரிய காரான இதில், 7 முதல் 8 பேர் வரை பயணிக்க முடியும். இந்த காரின் விலை, 65 லட்சம் ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement