இந்திய பெண்கள் 'நம்பர்-3': ஒருநாள் போட்டி தரவரிசையில்

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இந்திய பெண்கள் அணி 3வது இடத்தில் உள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் பெண்கள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இந்திய அணி 121 புள்ளிகளுடன் 'நம்பர்-3' இடத்தை தக்கவைத்துக் கொண்டது. சமீபத்தில் இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் கோப்பை வென்ற இந்தியா, 8 'ரேட்டிங்' புள்ளி கூடுதலாக பெற்றது.


முதலிரண்டு இடத்தில் ஆஸ்திரேலியா (167 புள்ளி), இங்கிலாந்து (127) அணிகள் நீடிக்கின்றன. நான்காவது இடத்தில் நியூசிலாந்து (96 புள்ளி) தொடர்கிறது. அடுத்த இரு இடங்களில் தென் ஆப்ரிக்கா (90), இலங்கை (82) அணிகள் உள்ளன. வங்கதேச அணி (79) 7வது இடத்துக்கு முன்னேறியது.

Advertisement