யூத் கால்பந்து: பஞ்சாப் 'சாம்பியன்'

கவுகாத்தி: யூத் லீக் கால்பந்து தொடரில் பஞ்சாப் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் 4-1 என, ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது.
அசாமின் கவுகாத்தியில், அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில் 17 வயதுக்குட்பட்டோருக்கான எலைட் யூத் லீக் கால்பந்து தொடர் நடந்தது. இதன் பைனலில் பஞ்சாப், ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பஞ்சாப் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பஞ்சாப் அணி சார்பில் கரிஷ் சோரம் (28வது நிமிடம்), ஆஷிஸ் லோஹர் (34வது), விகாஷ் கிஸ்கு (37வது), உஷாம் துங்கம்பா சிங் (39வது) தலா ஒரு கோல் அடித்தனர். ஜாம்ஷெட்பூர் அணிக்கு ஹீரங்கம்பா சேரம் (84வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதுகுளத்துார், கமுதியில் காற்றுடன் பலத்த மழை
-
சிறப்பாக பணிபுரிந்த எஸ்.ஐ., போலீசாருக்கு டி.ஐ.ஜி பாராட்டு
-
மண்வெட்டியால் சாதம் கிளறி பக்தர்களுக்கு அன்னதானம்
-
ராமேஸ்வரம் இ சேவை மையத்தில் தடாலடி வசூலால் மக்கள் பாதிப்பு
-
மங்களநாதர் சுவாமி களரி மண்டகப்படி
-
பரமக்குடி வைகை ஆற்றில் தசாவதார சேவையில் அழகர்: கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
Advertisement
Advertisement