செஸ்: வைஷாலி ஏமாற்றம்

கிராஸ்லோப்மிங்: சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான கிராண்ட் ப்ரி செஸ் தொடர், 6 கட்டமாக நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 'டாப்--2' இடம் பெறுபவர்கள், கேண்டிடேட்ஸ் தொடரில் (உலக கோப்பை தகுதி போட்டி) பங்கேற்க தகுதி பெறலாம். இதன் கடைசி, 6வது தொடர் ஆஸ்திரியாவில் நடக்கிறது.
இதன் ஏழாவது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, சுவிட்சர்லாந்தின் அலெக்சாண்ட்ரா கோஸ்ட்டெனியுக் மோதினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் வைஷாலி. துவக்கத்தில் சமபலத்தில் இருந்த போதும், 21 வது நகர்த்தலில் செய்த தவறு காரணமாக, வைஷாலி தோல்வியடைந்தார்.
ஏழு சுற்று முடிவில் உக்ரைனின் அனா முஜிசக் (5.0), சீனாவின் ஜு ஜினெர் (5.0) முதல் இரு இடத்தில் உள்ளனர். இந்திய வீராங்கனை வைஷாலி (4.0) 4வது இடத்தில் உள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதுகுளத்துார், கமுதியில் காற்றுடன் பலத்த மழை
-
சிறப்பாக பணிபுரிந்த எஸ்.ஐ., போலீசாருக்கு டி.ஐ.ஜி பாராட்டு
-
மண்வெட்டியால் சாதம் கிளறி பக்தர்களுக்கு அன்னதானம்
-
ராமேஸ்வரம் இ சேவை மையத்தில் தடாலடி வசூலால் மக்கள் பாதிப்பு
-
மங்களநாதர் சுவாமி களரி மண்டகப்படி
-
பரமக்குடி வைகை ஆற்றில் தசாவதார சேவையில் அழகர்: கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
Advertisement
Advertisement