டிரைவர் தற்கொலை
நடுவீரப்பட்டு: பாலுார் அருகே குடிபோதையில் வீட்டில் துாக்கு போட்டு கொண்டு ஒருவர் இறந்தார்.
பண்ருட்டி அடுத்த பாலுார் சன்னியாசிப்பேட்டையை சேர்ந்த டிரைவர் ஏழுமலை,45; குடிப்பழக்கம் உள்ளவர்.
இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.இதனால் மன விரக்தியில் ஏழுமலை தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். நேற்று முன்தினம் மதியம் தாய் சின்னபொண்ணுவிடம் பேசிவிட்டு வீட்டிற்கு சென்றவர் மாலை வரை வெளியில் வராததால்,சந்தேகமடைந்த அவரது மகன் ஆகாஷ் வீட்டிற்குள் சென்ற பார்த்த போது ஏழுமலை வீட்டின் உள்ளே சாரத்தில் துாக்கு போட்ட நிலையில் இருந்தார்.
உடன் ஏழுமலையை மீட்டு கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?
-
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
-
இந்தியா- மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி
-
பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியதால் அரசுக்கு ரூ.33,000 கோடி வருவாய்
-
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை சிறப்பாக இருந்தது: ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று துவக்கம்