மூன்று மகள்களுடன் தாய் மாயம்

வடலூர்: பெண் தனது, 3 மகள்களுடன் மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த கல்குணம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி, முத்துலட்சுமி, 65. இவரது மகள் திலகவதி, 30. இவருக்கு அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவருடன் திருமணம் நடந்து, இவர்களுக்கு சுஷ்மிதா, 10, கிருபாஸ்ரீ, 5, ஷிவானி, 3, என 3 மகள்கள் உள்ளனர்.

முத்துலட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், திலகவதி கடந்த ஓராண்டாக தாய் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அருப்புக்கோட்டைக்கு செல்வதற்காக திலகவதி மற்றும், 3 மகள்களை வடலூரில் பஸ் பிடித்து முத்துலட்சுமி அனுப்பினார்.

இருந்தும் 4 பேரும் ஊர் சென்று சேரவில்லை. அவரது குடும்பத்தினர் 4 பேரையும் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.

முத்துலட்சுமி புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement