இசைக்கலைஞர் வீட்டில் தீ விபத்தால் பொருட்சேதம்
சேலம், சேலம், அஸ்தம்பட்டி, காந்தி நகரில் வசிப்பவர் முருகன், 60. இவர் பல்வேறு விசேஷங்களுக்கு வாத்தியம் வாசிக்கும் தொழில் செய்கிறார்.
நேற்று காலை, 11:00 மணிக்கு வீட்டை பூட்டிச்சென்றார். சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. மக்கள் தகவல்படி, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து, ஒரு மணி நேரத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் வீட்டில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள், அவரது வாத்திய கருவிகள் எரிந்து நாசமாகின. அஸ்தம்பட்டி போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பள்ளி, கல்லுாரிகளில் இயக்கப்படும் 38 வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு
-
லாரி, டிராக்டர் பறிமுதல்
-
கடலாடியில் சேதமடைந்த நிலையில் தார் சாலைகள் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகம்
-
பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் அமைப்பு தினமலர் செய்தி எதிரொலி
-
மாணவருக்கு உதவித் தொகை
-
மே மாதத்திற்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
Advertisement
Advertisement