பள்ளி, கல்லுாரிகளில் இயக்கப்படும்  38 வாகனங்களுக்கு  அனுமதி மறுப்பு 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லுாரி வாகனங்கள் ஆய்வு செய்ததில் 38 வாகனங்கள் குறைபாடுகளுடன் இருந்ததால் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குறைகளை நிவர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் சரி செய்தால் மீண்டும் அனுமதி வழங்கப்படவுள்ளது.

மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளில் இயக்கப்படும் 519 வாகனங்கள் உள்ளன.

இதில் ராமநாதபுரத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் முன்னிலையில் வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், பத்மபிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

முதல் கட்டமாக 222 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 38 வாகனங்களில் தீயணைப்பு கருவிகள், முதலுதவிப்பெட்டி, கண்காணிப்பு கேமரா ஆகியவை பொருத்தப்படாத நிலையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

இந்த வாகனங்களுக்கு அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து முதன்மை கல்வி அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைபாடுகளை சரி செய்து ஜூன் முதல் தேதிக்குள் மீண்டும் ஆய்வு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குறைபாடுகள் சரி செய்யப்பட்டால் இந்த பள்ளி வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்படவுள்ளது.

தொடர்ந்து பள்ளி வாகனங்களின் உரிமங்களை புதுப்பிப்பதற்கானபணிகளை பள்ளி நிர்வாகங்கள் செய்து வருவதால் முழுமையாக அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என வட்டார போக்கு வரத்து அலுவலர் ஆனந்த் தெரிவித்தார்.--

Advertisement