லாரி, டிராக்டர் பறிமுதல்

திருவாடானை: திருவாடானை அருகே பாண்டுகுடியில் மணல் குவியலாக கொட்டப்பட்டிருந்தது. அந்தப் பக்கமாக ரோந்து சென்ற திருவாடானை தாசில்தார் ஆண்டி மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.

பட்டா இடத்தில் அரசு அனுமதி இல்லாமல் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. புகாரின் பேரில் தொண்டி போலீசார் சென்று 2 மணல் அள்ளும் இயந்திரம், ஒரு லாரி, ஒரு டிராக்டரை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

Advertisement