கடலாடியில் சேதமடைந்த நிலையில் தார் சாலைகள் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகம்
கடலாடி: கடலாடி பஸ் ஸ்டாண்டில் இருந்து தேவர் சிலை வழியாக செல்லக்கூடிய சாலை மற்றும் மெயின் பஜார், நீதிமன்றம் செல்லக்கூடிய சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
கடலாடி யூனியன் அலுவலகத்திற்கு 60 கிராம ஊராட்சிகளில் இருந்து பொதுமக்கள் வருகின்றனர். தன்னார்வலர்கள் கூறியதாவது:
கடலாடியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சந்தை நடக்கிறது. இந்நிலையில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய இடமாக கடலாடி விளங்குகிறது.
சேதமடைந்த தார் சாலையால் வாகனத்தில் செல்வோர் தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.
கடலாடி தெருக்கள் மற்றும் பிரதான சாலையை ஆக்கிரமித்து சாலையோர கடைகள் அதிகளவு படிகள் மற்றும் பிளாட்பாரங்களை கட்டி உள்ளனர். இதனால் கனரக வாகனங்கள் கடந்து செல்ல வழியின்றி போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது. இச்சாலையின் வழியாக கடலாடி நீதிமன்றத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.
எனவே கடலாடி வருவாய் துறையினர், யூனியன் நிர்வாகம், போலீசார் ஒன்றிணைந்து சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புதிய தார்சாலை அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும்
-
பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்புக்கான மக்களை 'பதம் பார்க்கும்' தீர்மானம்! வைப்புத்தொகை, மாத கட்டணம் உயர்கிறது; தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் 'கப் - சிப்'
-
பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறிப்பு
-
தமிழகத்தில் நான்கரை மாதங்களில் நாய்க்கடியால் 2.16 லட்சம் பேர் பாதிப்பு
-
பட்டா கேட்டு முற்றுகை யிட்ட மக்கள்
-
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கண்டிப்பு - ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
-
வீரபாண்டி சித்திரை திருவிழா ஊர் பொங்கலுடன் நிறைவு